பிரித்தானியாவில் மலைப்பாம்பு வளர்த்தவர் பரிதாபமாக மரணம் !!!

பிரித்தானியாவில் மலைப்பாம்பு தீண்டி நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். Hampshire பகுதியைச் சேர்ந்த 31 வயதான Dan Brandon என்பவரே வீட்டில் வளர்க்கப்பட்ட மலைப்பாம்பு தீண்டி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.Dan Brandon பாம்பு பிரியர் என்பதால் தான் வளர்க்கும் மலைப்பாம்புகளை புகைப்படம் எடுத்து பேஸ் புக் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.இந்த நிலையில், தன்னுடைய வீட்டில் Dan Brandon கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுளார். அவருக்கு அருகே பாம்பு ஒன்றும் இருந்துள்ளது.பாம்புக்கு பசி எடுத்த நிலையில் தனது உணவுக்காக Dan Brandon வை உட்கொள்ள முயற்சித்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்த பின்னரே தெளிவான முடிவு கிடைக்கும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*