இலங்கை அணி முன்னாள் வீரர் சங்ககரா முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்

இலங்கை அணி முன்னாள் வீரர் சங்ககரா முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.இலங்கை அணி முன்னாள் வீரர் சங்ககரா, 39. ஆஸ்திரேலியாவின் பிராட்மேனுக்குப்பின் டெஸ்டில் அதிக இரட்டை சதம் (11) அடித்த வீரர். கடந்த 2015ல் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெற்றாலும், முதல் தர போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார்.இங்கிலாந்தில் நடக்கும் கவுன்டி சாம்பியன்ஷிப்பில் கடைசியாக சர்ரே அணிக்காக பங்கேற்றார். சமீபத்தில், மான்செஸ்டரில் லான்காஷயர் அணிக்கு எதிராக 14, 35 ரன்கள் எடுத்தார். இந்நிலையில், முதல் தர போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்றார். இதுவரை, 260 முதல் தர போட்டியில் 20911 ரன்கள் எடுத்துள்ளார்.

இது குறித்து சங்ககரா கூறுகையில்,

முதல் தர போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதால், கவுன்டி சாம்பியன்ஷிப்பில் விளையாட முடியாது. இது, வருத்தம்தான் என்றாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*