நாட்டை அதிர வைத்த ஆருஷி கொலை வழக்கில் இன்று தீர்ப்பு!!!

அலகாபாத்: சிறுமி ஆருஷி கொலை வழக்கில் பெற்றோருக்கு விதிக்கப்பட்ட தண்டணையை எதிர்த்து தாக்கல் செய்த அப்பீல் வழக்கில் இறுதி தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது.

கடந்த 2008ல், உ.பி., மாநிலம் நொய்டாவில், ஆருஷி தல்வார், என்ற 14 வயது சிறுமி மற்றும் வீட்டு வேலையாள், ஹேம்ராஜ், 45, ஆகியோர், மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். அவர்களிடையே முறையற்ற உறவு இருப்பதாக சந்தேகித்து, ஆருஷியின் பெற்றோர் ராஜேஷ் தல்வர், நுபுர் தல்வார் ஆகியோர் கூட்டாக சேர்ந்து இருவரையும் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு எழுந்தது.

நாட்டை உலுக்கிய இந்த இரட்டை கொலை வழக்கினை சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இதில் கொலையை திட்டமிட்டு செய்ததாக ஆருஷியின் தந்தையான பல் டாக்டர் ராஜேஷ் தல்வார், தாயார் நுபுர் தல்வார் ஆகியோருக்கு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் 2013-ம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது. இருவரும் காசியாபாத் நகரில் உள்ள தஸானா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தண்டனையை எதிர்த்து அலகாபாத் ஐகோர்ட்டில் நடந்து வரும் அப்பீல் வழக்கின் விசாரணையில் அனைத்து சாட்சியங்களும் விசாரிக்கப்பட்ட நிலையில் தீர்ப்பு இன்று வெளியாகிறது. இதில் பெற்றோர் தான் உண்மையான குற்றவாளிகளா இல்லையா என்பது தெரியவரும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*