`தொடர்ச்சியாக சாதிப்பது எப்படி?’ – ரகசியம் பகிர்கிறார் புவ்னேஷ்வர் குமார்

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்துள்ளது. இந்தப் போட்டிக்கான ஆட்ட நாயகன் விருதை இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவ்னேஷ்வர் குமார் பெற்றார். போட்டி முடிந்த பின்னர் தன் வெற்றிக்கான ரகசியம் பற்றி அவர் பகிர்ந்துகொண்டார்.

தொடர்ச்சியாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கான காரணத்தைப் பற்றி புவ்னேஷ்வர் குமார், `அமைதியாகவும் நம்பிக்கையுடனும் இருப்பது என் இயல்பு. அதை நான் எப்போதும் மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. நான் பயிற்சி செய்வனவற்றை, போட்டியின்போது சரியாக செயல்படுத்துவதில் மட்டும்தான் என் கவனம் இருக்கும். எப்போது என்னிடம் புது பந்து கொடுக்கப்பட்டாலும், அதை ஸ்விங் செய்வதற்கே விரும்புவேன். ஆனால், இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது அப்படி நடக்கவில்லை. எனவே, நல்லென்னத்தில் பந்துகளை வீசப் பார்த்தேன். நீங்கள் தன்னம்பிக்கையுடன் இருக்கும்போது, எல்லா விஷயங்களும் சற்று சுலபமாகும். என்னை நிர்வகிக்கும் இந்திய அணிக்கு மிக்க நன்றி. நான் உடற்கட்டு கொண்டவன் அல்ல. ஆனால், கடைசி இரண்டு ஆண்டுகளில் என் உடல் வலிமை நன்றாக முன்னேறியுள்ளது’ என்று கூறியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*