ஃபேஸ்புக்கில் இருக்கும் போலிக் கணக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

உலகின் முன்னணி சமூக ஊடகங்களுள் ஒன்றான ஃபேஸ்புக்கில் உள்ள போலிக் கணக்குகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீட்டுக்கு உதவியதாக  ஃபேஸ்புக் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இந்தத் தகவல் மார்க் சக்கர்பெர்க் தலைமையிலான அந்த நிறுவனத்துக்குப் புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் 2.1 பில்லியன் பயனாளர்களைக் கொண்டு இயங்கிவரும் ஃபேஸ்புக் நிறுவனம், மூன்றாவது காலாண்டு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், போலிக் கணக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ள அந்த நிறுவனம், அதைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*